ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படும் வேர்க்கடலையின் சிறப்பும் உண்ணும் முறையும்
‘ஏழைகளின் பாதாம்' என்று நிலக்கடலையைக் குறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது என ஆய்வுகள் உணர்த்துகின்றன.
நாகரிக வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பாரம்பர்ய உணவுப் பொருள்கள் பலவற்றை நாம் மறந்து வருகிறோம். அந்தவரிசையில் நிலக்கடலையையும் நாம் மறந்துவிட்டோம்.
வேர்க்கடலையில் இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.
இவை கேன்சர் செல்களை மேலும் வளரவிடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டவை என்பதோடு, ஏற்கனவே இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்க முயற்சி செய்கிறது என்பதும் இதன் முக்கிய மருத்துவ பண்பாகும்.
வேர்க்கடலையில் புரதச்சத்து அதிகம் உள்ளது என்பதும் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது என்பதும், நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான புரத சத்துக்களைக் கொண்டது என்பதும் நிலக்கடலையின் அற்புதமான குணங்கள் ஆகும்.
சத்துக்கள்
அத்தோடு இவை பெண்களின் கர்ப்பகாலத்தில் இரத்த விருத்திக்கு உதவுகிறது.
வேர்க்கடலையின் தோல்களில் நிறையச் சத்துகள் உள்ளன என்பதால் இதன் தோள்களை நீக்காமல் சாப்பிடுவது அதிக சத்துக்கள் தரும் என்று கூறப்படுகின்றது.
ஒரு நாளைக்கு 50 கிராம் வேர்க்கடலை சாப்பிட்டால் போதும். ஆனால், வேர்க்கடலை சாப்பிடும்போது, அதன் சுவை கசப்பாக இருந்தால், அதை சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது உணவு செரிமாணம் ஆவதை பாதிக்கக் கூடியது.
வேர்க்கடலையை பச்சையாக சாப்பிட்டால் அதனுடன் வெல்லம் சாப்பிட வேண்டும். நிலக்கடலையில் கலோரி, புரதம், இரும்பு, ஃபோலேட், நியாசின், துத்தநாகம் போன்றவை பாதமை விட அதிகமாக உள்ளது.
நிலக்கடலையில் பாதாமை விட வைட்டமின் பி சத்துக்கள் அதிகம் உள்ளது என்று கூறப்படுன்றது.
மேலும் இது இதயம், தசைகள் மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு அவசியமானது.