கிளிநொச்சி ஐயப்ப பக்தர் வீடொன்றில் விசேட அதிரடிப்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கிளிநொச்சி வீடொன்றில் விசேட அதிரடிப்படையினரி சுற்றிவளைப்பில் பெரும்தொகை கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இன்று அமுல்படுத்தும் வகையில் பொலிஸ் மா அதிபரால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு, விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தினை அமுல்படுத்த பணிப்புரை விடுக்கப்பட்டது.
68 கிலோக்கு மேற்பட்ட 30 கஞ்சா பொதிகள்
அப்பணிப்பின் கீழ் விசேட போதை பொருள் ஒழிப்பு குழு ஒன்றை அமைத்து அக் குழுவின் ஊடாக இன்று காலை (18) கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாரதிபுரம் பகுதியில் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் மோப்பநாய் சகிதம் தேடுதல் மேற்கொண்டது. இதன் போது சுமார் 68 கிலோக்கு மேற்பட்ட 30 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் வீடு ஒன்றின் கூரை தகடுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. அதேவேளை வீட்டில் உள்ளவர்கள் ஐயப்ப பக்தர்கள் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.