இலங்கையரின் பயணபையை சோதித்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாக சிகரெட்டுக்களை நாட்டுக்கு கடத்தி வந்த நபரொருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்த விமானத்திலேயே கைதுசெய்யப்பட்ட நபர் வருகை தந்துள்ளார்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 21 ஆயிரத்து 400 சிகரெட்டு
இவரிடமிருந்து மீட்கப்பட்ட சிகரெட்டுக்களின் பெறுமதி சுமார் 21 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த நபர் டுபாயிலுள்ள உணவகம் ஒன்றில் சமையல்காரராக பணியாற்றிய வந்த 38 வயதுடைய நாத்தாண்டிய பிரதேசத்தில் வசிப்பவர் ஆவார்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 21 ஆயிரத்து 400 சிகரெட்டுக்களை குறைத்த நபரின் பயணப் பையில் மறைந்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாரிகள் மீட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.