இறுதிசடங்கில் உயிர்த்தெழுந்த பெண்; அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் !
ஈக்குவடோரில் இறுதிசடங்கில் உயிரிழந்த பெண், உயிருடன் இருப்பதை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஈக்குவடோரில் பெல்லா மொன்டயா என்ற 76 வயது பெண் கடந்தவாரம் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை உறவினர்கள் அவரின் உடைகளை மாற்றிஇறுதி நிகழ்விற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தவேளை அவர் சுவாசிப்பதை கண்டுபிடித்தனர்.
பெண்ணிற்கு மாரடைப்பு
தொடர்ந்து உடனடியாக உறவினர்கள் அவரை தீவிர கிசிச்சை பிரிவில் சேர்த்துள்ள சிகிற்சை அளிகப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
குறிப்பிட்ட பெண்ணிற்கு மாரடைப்பு ஏற்பட்டது அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெற்ற போதிலும் அது வெற்றியளிக்கவில்லை அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர் உறுதி செய்தார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 9 மணியளவில் அம்மாவை மருத்துவமனையில் அனுமதித்தோம் மதியமளவில் அவர் இறந்துவிட்டார் என வைத்தியர் தெரிவித்தார் என அந்த பெண்ணின் மகன் தெரிவித்துள்ளார்.
இறுதிச்சடங்கிற்காக சவப்பெட்டியில் பெண் வைக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் பல மணிநேரம் உறவினர் ஒருவர் , உயிரிழந்ததாக கூறப்பட்ட பெண் , சுவாசிப்பதை காணும் வரை பிரேதப்பெட்டியில் அந்த பெண்னை வைத்திருந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாட்டின் சுகாதார அமைச்சு இது குறித்து விசாரணை செய்வதற்காக குழுவொன்றை நியமித்துள்ளது.