யாழில் பிரபல ஆலயம் ஒன்றில் பெருதொகையை களவாடிய ஓய்வு பெற்ற விதானை!
யாழ்ப்பாணம் வடமராட்சியில் அமைந்துள்ள பிரபல விநாயகர் ஆலயத்தின் நிலையான வைப்பில் இருந்த பெருந்தொகையான நிதியை ஓய்வுபெற்ற கிராம சேவகர் ஒருவர் களவாடியுள்ள்ளதாக சமூகவலைத்தளங்களில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்கள் படி,
போலியாக கூட்டறிக்கை தயாரித்து மோசடி
கடந்த 2023 ஐப்பசி மாதமளவில் 10 இலட்சம் ,2024 தை மாதமளவில் 7 இலட்சம் இதற்காக போலியாக கூட்டறிக்கை தயாரித்தும் கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையையும் போலியாக ரெடி செய்து வங்கியிலிருந்த பணத்தை குறித்த நபர் களவாடியதாக கூறப்படுகின்றது.
இதேவேளை இவர்களின் மோசடி அம்பலம் ஆகியதும் ஆலய உபதலைவர் ,பொருளாளர் தாமகே முன்வந்து பணத்தை வட்டியும் முதலுமாகக் செலுத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில் தொடர்பாக ஆலய நிர்வாகம் கண்டும் காணாமல் உள்ளதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை போலி ரபர் முத்திரை பயன்படுத்த பணம் எடுக்கப்பட்டமை உண்மை எனவும் அது தொடர்பில் பொலிஸ் நிலையததில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த பிரதேசத்திற்குரிய பிரதேச செயலகம் தெரிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.