ஓமானில் இருந்து நாடு திரும்பிய பெண்கள் விடுத்த கோரிக்கை!
வேலை நிமித்தமாக ஓமானுக்குச் சென்று இன்று இலங்கை திரும்பிய இரண்டு பெண்கள், ஓமானில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளின் செயற்பாடுகளை விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில், குற்றப் புலனாய்வு பிரிவினர் நிலைமையை விசாரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டை வந்தடைந்த பின்னர் ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பான வீட்டில் தங்கியிருந்த இரண்டு பெண்கள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர். ஓமானில் மனித கடத்தல் நடவடிக்கை அதிகரித்து வருகின்றது.
இதன்படி, வெளிவிவகார அமைச்சின் ஆலோசனையின் பேரில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த மனித கடத்தல் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தனர்.
ஓமானில் இலங்கைப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஓமன் தூதரகத்தின் மூன்றாவது செயலாளரான இ. குஷான் அடுத்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.