மரக்கறிகளின் விலையில் சடுதியான மாற்றம்!
மரக்கறிகளின் விலைகள் முன்று மடங்காக அதிகரித்துள்ளதாக மரக்கறி மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த மாதத்தோடு ஒப்பிடுகையில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சீரற்ற காலநிலை
நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகள் போதியளவில் சந்தைக்கு வந்து சேருவதில்லை எனவும் 40 வீதமான மரக்கறிகளே சந்தைக்கு கிடைப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
அது தொடர்பில் பேலியகொடை பொது சந்தை வர்த்தகர்கள் தெரிவிக்கையில்,
சந்தையில் கத்தரிக்காய் ஒரு கிலோ 350 ரூபாவிலிருந்து 400 ரூபா வரை விற்கப்படுவதாகவும் போஞ்சி ஒரு கிலோ 500 ரூபாவிலிருந்து 600 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும், கறிமிளகாய் ஒரு கிலோ 400 ரூபா வுக்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகவும் பாகற்காய் 450 மற்றும் 500 ரூபாவிற்கு விற்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே வேளை மலையக பகுதிகளிலும் மரக்கறிகளின் விலை வெகுவாக அதிகரித்து காணப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.