குழந்தைகள் உட்பட 11 பேரை கடித்த விசர் நாய்; அச்சத்தில் மக்கள்
வடக்கு களுத்துறை பிரதேசத்தில் வீதியில் சுற்றித்திரியும் விசர் நாய் ஒன்று குழந்தைகள் உட்பட 11 பேரை கடித்துள்ளமை பிரதேச மக்கள் மாத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் இது தொடர்பில் களுத்துறை மாநகர சபையின் சுகாதார பிரிவுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

வீதியில் சுற்றித்திரியும் விசர் நாய்
வடக்கு களுத்துறையில் கெலிடோ வீதியில் சுற்றித்திரியும் விசர் நாய் ஒன்றே இவ்வாறு வீதியில் பயணிக்கும் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட பலரை கடித்துள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தினால் குறித்த பகுதியில் வசிப்பவர்களின் அன்றாட செயற்பாடுகளில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விசர் நாய்க்கடிக்கு இலக்காகிய 11 பேரும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.