ரணிலைச் சந்தித்த பிரபல அரசியல்வாதி; யார் அவர்?
ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் ஊடகப் பணிப்பாளராக இருந்த சானக கருணாரத்ன, இணையதளங்களில் வெளியான செய்தியைக் காட்டி 'ஏ.கே.டி' (A.K.D) உங்களைக் காண வந்தாரா என்று, ரணிலிடம் வினவினார்.
"ரணிலைச் சந்தித்த அந்தப் பிரபல்யமான அரசியல்வாதி யார்? என்றுதான் சமூக ஊடகங்களில் பேசப்படுகிறது" என்று சானக மீண்டும் அவரிடம் கேட்டார்.
அதற்கு ரணில், "அப்படி ஒருவரையல்ல, நான் சந்திக்கும் அரசியல் தலைவர்கள் பலர் இருக்கிறார்கள்" என்று கூறி, எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் மௌனமாகிவிட்டார்.
அதோடு அரசாங்க இயந்திரத்தை இயக்குவதற்கு வெளியிலிருந்து ஆட்களைத் தேடிக்கொண்டிருப்பதை நான் நன்கு அறிவேன். இவர்களைப் பதவிகளில் அமர்த்துவது, கட்சி அனுமதித்தால் மட்டுமே நடக்கும். இவர்களுக்குத் தங்கள் தரப்பு ஆதரவு இல்லை என்றால், அரசாங்கத்தை நடத்த முடியாது" என்று ரணில் பதிலளித்தார்.