வளர்ப்பு நாயை தீ வைத்து எரித்த நபர்; காரணத்தால் அதிர்ச்சி!
இம்புல்கொட பிரதேசத்தில் வளர்ப்பு நாயொன்றுக்கு தீ வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நால்யை எரித்த 65 வயதான சந்தேக நபர் கடந்த திங்கட்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் இம்புல்கொட, யக்கல பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இனச்சேர்க்கையால் ஆத்திரம்
பெப்ரவரி 10 ஆம் திகதி இரவு செல்லப்பிராணியை வைத்திருக்கும் குடும்பத்தின் பக்கத்து வீட்டுக்காரரான சந்தேக நபரால் வளர்ப்பு நாய் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இதனையடுத்து நாய் பலத்த தீக்காயங்களுடன் கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்றபோது நாய் இறந்தது.
பல ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்களின் உரிமையாளரான சந்தேக நபர், தனது அண்டை வீட்டு பெண் நாய் தனது நாய்களுடன் இனச்சேர்க்கை செய்ததையடுத்து ஆத்திரமடைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து உயிரிழந்த வளர்ப்பு நாயின் உரிமையாளர்கள் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ததையடுத்து யக்கல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று யக்கல பொலிஸாரால் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.