துருக்கிக்கு பெரும் தொகையை நன்கொடையாக வழங்கிய நபர்; பெயரைக்கூட கூறாது மாயம்!
அமெரிக்கா நாட்டில் உள்ள துருக்கி தூதரகத்திற்குள் நுழைந்த அனாமதேய நபர் ஒருவர், இலங்கை மதிப்பில் சுமார் 1100 கோடி ரூபாயை நன்கொடையாக கொடுத்துச் சென்றுள்ளார்.
தனது பெயரைக்கூட கூறாது அவர், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக பெரும் தொகையினை கொடுத்துச் சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத் தொகை இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட 1100 கோடி ரூபாவாகும் என்று கூறப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ட்விட்டரில் இந்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், பாகிஸ்தானிய குடிமகனாகக் கூறப்படும் நபரின் கருணையால் நெகிழ்ந்த்தாக எழுதினார்.
அதேவேளை துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் மீட்பு பணிகள் அங்கு தொடர்ந்தவண்னம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.