மரமொன்றிலிருந்து விழுந்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
குருணாகல், பொல்பித்திகம பகுதியில் மரமொன்றிலிருந்து வாவிக்குள் குதித்தவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (31) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குருணாகல், பொல்பித்திகம, கிரிப்பமுனேகம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நண்பர்களுடன் நிராட சென்ற நபர்
இவர், நேற்று (31) பிற்பகல் இரண்டு நண்பர்களுடன் இணைந்து பொல்பித்திகம புதிய வாவிக்கு நீராடச் சென்றுள்ளார்.
இதன்போது இவர் வாவிக்கு அருகிலிருந்த மரமொன்றின் கிளையில் ஏறி நின்று வாவியில் குதித்ததன் பின்னர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரது சடலம் குருணாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் , மேலதிக விசாரணைகளை பொல்பித்திகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.