இலங்கை நீதிமன்ற வரலாற்றில் புதிய மைல்கல் ; மின்மயமாக்கப்பட்ட வழக்கு விசாரணை ஆரம்பம்

Sri Lanka Sri Lankan Peoples High Court of Sri Lanka
By Viro Mar 29, 2026 08:52 AM GMT
Report

இலங்கை நீதிமன்ற வரலாற்றில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், காகிதப் பயன்பாடற்ற மின்-முறைமை அடிப்படையிலான வழக்கு விசாரணை கடந்த மார்ச் 26ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் முதன்முறையாக நடைபெற்றது.

தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில், நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர மற்றும் கலாநிதி சோபித ராஜகருணா ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணை இடம்பெற்றது.

இலங்கை நீதிமன்ற வரலாற்றில் புதிய மைல்கல் ; மின்மயமாக்கப்பட்ட வழக்கு விசாரணை ஆரம்பம் | A New Milestone In The Sri Lanka S Courts

டிஜிட்டல் முறைமை

2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் வழக்கின் தீர்ப்புக்கமைய, அரசாங்கத்திற்கு வழங்கப்பட வேண்டிய 3 மில்லியன் ரூபா நட்டஈட்டை வழங்கத் தவறியமைக்காக, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு குறித்த வழக்கினூடாக இந்த டிஜிட்டல் முறைமை பரிசீலிக்கப்பட்டது.

திறந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கமான காகிதக் கோப்புகளுக்குப் பதிலாக உயர் நீதிமன்றத்தால் தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் கோப்புகளை நீதியரசர்கள் கணினி மூலம் பரிசீலித்தனர்.

பிரதிவாதிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு குற்றப்பத்திரிகையை உயர் நீதிமன்ற பதிவாளர் மனோதி ஹேவாவசம் தெளிவுபடுத்தியதுடன், அதன் மீது டிஜிட்டல் கையொப்பமிட்டு மின்-முறைமையில் பதிவேற்றியதன் மூலம் சம்பந்தப்பட்ட தரப்பினர் அக்குற்றப்பத்திரிகையைப் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டது.

யாழில் 26 வயது இளைஞன் நீண்டகாலம் அரங்கேற்றிய தகாத செயல் ; பொலிஸார் வலைவீச்சு

யாழில் 26 வயது இளைஞன் நீண்டகாலம் அரங்கேற்றிய தகாத செயல் ; பொலிஸார் வலைவீச்சு

வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 2026 மே 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவினால் ஆரம்பிக்கப்பட்ட நீதிமன்றக் கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் "E-court" திட்டத்தின் முக்கிய மைல்கல்லாக இது கருதப்படுகிறது.

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் உயர் நீதிமன்றத்தாலேயே இந்தச் செயலி முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.

அவர்கள் சவப்பெட்டியில் தான் திரும்புவார்கள் ; ஈரானை சுற்றிவளைக்கும் அமெரிக்காவின் பெரும் படைக்கு பறந்த எச்சரிக்கை

அவர்கள் சவப்பெட்டியில் தான் திரும்புவார்கள் ; ஈரானை சுற்றிவளைக்கும் அமெரிக்காவின் பெரும் படைக்கு பறந்த எச்சரிக்கை

இந்த E-filing முறைமை மூலம் வினைத்திறனான மற்றும் குறைந்த செலவிலான வழக்குத் தாக்கல் சாத்தியமாவதுடன், காகிதங்களுக்காகச் செலவிடப்படும் பெருமளவிலான வெளிநாட்டு அந்நியச் செலாவணியையும் சேமிக்க முடியும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

2026 பெப்ரவரி 10ஆம் திகதி முதல் சட்டத்தரணிகள் மின்-முறையில் வழக்குகளைத் தாக்கல் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதுமுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் இம்முறையை விரைவில் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு

பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US