இளைஞனின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள் விபத்து!
ஹொரணை - இங்கிரிய வீதியில் கிரிகலஹேன பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று(26) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹொரணையில் உள்ள அரச பாடசாலையொன்றின் முன்னாள் மாணவர்களின் இரவு பகலாக விளையாட்டுப் போட்டியை பார்த்துவிட்டு வீடு திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் லொகு கங்கணம்ல டொன் ஷகில கிரிஷாந்த என்ற 20 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலும் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வடிகான் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த சாரதி தற்போது இங்கிரிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.