மூன்று பிள்ளைகள் இருந்தும் தாயகத்தில் தனிமையில் தவிக்கும் தாய்!
தாயகத்தில் மக்களின் பல்ல துன்பங்களை வெளியுலகிற்கு எடுத்துசேலும் ஒரு நிகழ்ச்சியாக மக்களின் நண்பனாக உறவுப்பாலம் நிகழ்ச்சி அமைந்துள்ளது. தாயகத்தில் பல உறவுகள் பல்வேறு கஸ்ரங்களுக்கு மத்தியில் அன்றாட வாழ்க்கை செலவையே கொண்டு நடத்த முடியாது பெரும் கஸ்ரத்தில் உள்ளனர்.
அங்கு வாழ்கின்ற பெண் தலைமைத்து குடும்பங்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் , தமது வாழ்வாதாரத்திற்கு படும் துன்பங்கள் பல உள்ளன. அந்தவகையில் முழங்காவில் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாயார் தனது வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகள் இருந்தும் தனித்து வாழும் அவல நிலைக்கு தள்லப்பட்டுள்ளார்.
கணவரை இழந்து கஸ்ரப்பட்டு பிள்ளைகளை வளர்து ஆளாகியபோது அவரது முதுமைக்காலத்தில் அநாதரவாக அந்த தாயார் இருப்பது பெரும் துன்ப நிகழ்வாக அமைந்துள்ளது.
இந்நிலையில் அவரது வாழ்வில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்பதுதான் இந்நிகழ்வின் நோக்கமாக உள்ளது. அதேவேளை தான் கஸ்ரதில் இருந்தாலும் தன் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டுமென அந்த தாயார் கூறியிருப்பது, கண்ணீரை வரவழைதுள்ளது.