மட்டக்களப்பில் இடம் பெற்ற அதிசயம்! படையெடுத்த மக்கள் கூட்டம்
அந்தோணியாரின் சிலையின் கண்களில் இருந்து திடீரென இரத்தம் வடியத் தொடங்கிய அதிசயம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் மட்டக்களப்பு கூளாவடி பகுதியில் நேற்று இரவு எட்டு மணி அளவில் இந்த அதிசயச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வழமை போல்.இந்த சொரூபத்துற்கு அருகாமையில் வீட்டில் இருக்கும் நபர் மாலை மற்றும் விளக்குகளை ஏற்றுவது வழமை. ஏற்றிய பின்னர் இவர் வணங்கி விட்டு செல்லும் போது, அந்தோனியாரின் கண்களை அவதானித்தபோது அதிலிருந்து நீர் வரும் அதிசயத்தை கண்டு வணங்கியுள்ளார்.
இதனை அடுத்து அப்பகுதி மக்களுக்கும் இவ்விடயம் தெரியவந்ததை அடுத்து அதிசயத்தை காண மக்கள் திரண்டு இருந்தனர்.
குறித்த அதிசயத்தை காண்பதற்காக அப்பகுதியில் மக்கள் படையெடுத்துள்ளனர். முன்னர் இதுபோன்ற அதிசயங்கள் பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.