கழிவறைக்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி; பதம் பார்த்த மலைப்பாம்பு
இயற்கை உபாதையை கழிக்க கழிவறையில் அமர்ந்திருந்தவரின் பிறப்புறுப்பை , திடீரென 12 அடி மலைப்பாம்பு ஒன்று பதம்பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர் சம்பவத்தை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
கழிவறை எங்கும் ரத்தம்
தாய்லாந்து நாட்டின் சமுத் பிரகான் மாகாணத்தைச் சேர்ந்தவர் தனத் தங்தேவனோன் என்பவே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 20ஆம் திகதி தனது வீட்டு கழிவறையை பயன்படுத்திக்கொண்டிருந்த போது அவரது பிறப்புறப்பில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. கழிவறையில் ஏதோ ஒன்று என்னை கடிப்பது போல் இருந்தது.
உடனே கழிவறைக்குள் கையை விட்டு என்னவென்று பார்க்க பாம்பை பார்த்ததும் நான் அதிர்ச்சியாகிவிட்டேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
12 அடி மலைபாம்பு
அது 12 அடி மலைபாம்பு என்றும் அது பிடியை தளர்த்த இல்லை எனவும், குறிப்பிட்டுள்ள அவர் மிகவும் மோசமான வலி, மற்றும் கழிவறை எங்கும் ரத்தம் இருந்தது.
கழிவறையில் ஒரு மலைப்பாம்பு இருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை" என குறிப்பிட்டிருந்தார். அதேசமயம் பாம்பிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கையில் அந்த பாம்பு அவரின் விரலையும் கடித்துவிட்டதாக அவர் கூறினார்.
இதனையடுத்து உடனே அங்கிருந்த பாத்ரூம் பிரஷை வைத்து அந்த பாம்பின் தலையிலேயே அடித்ததை அடுத்து பிடியை தளர்த்தி உள்ளது.
அவரது தாக்குதலில் பாம்பு உயிரிழந்ததை அடுத்து அயல் வீட்டாரை சம்பவத்தை கூறியதை அடுத்து அவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
,"நல்ல வேளை அது வெறும் மலைப்பாம்பு. இதுவே நாகமாக இருந்திருந்தால் அது என்னை கொன்றிருக்கும்" என கூறியுள்ள அவர், மலைப்பாம்பு விஷத்தன்மை உடையது இல்லை என்பதால், எவ்வித தையலும் இன்றி தான் தப்பித்ததாகவும் பதிவிட்டுள்ளார்.