வீட்டில் நிச்சயிக்கப்பட்ட திருமணம்; கழட்டிவிட நினைத்த காதலன்; மாணவி எடுத்த முடிவு!
புத்தள பிரதேசத்தில் 15 வயதுடைய மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அவரது காதலனை, பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நேற்றையதினம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் புத்தள , கட்டுகஹகல்கே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று தனது மகளை அவருக்குத் திருமணம் செய்து வைக்க முன்வந்துள்ளார்.
சந்தேக நபர் கைது
அப்போது, இளைஞரின் பெற்றோரும் அதற்கு சம்மதித்த நிலையில் இளைஞனுக்கும் , மாணவிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் 10ம் திகதி குறித்த மாணவி வழக்கம் போல் அந்த இளைஞனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதன்போது இளைஞன் மாணவியை பலதடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் .
அதன் பின்னர் இளைஞன் மாணவியை விட்டு விலகிய நிலையில் மாணவி தாயுடன் பொலிஸ் நிலையத்திற்கு வந்து இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய புத்தள பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, மாணவி மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் , கைதான சந்தேக நபரை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புத்தள பொலிஸார் தெரிவித்தனர் .