பிள்ளைகளுடன் சென்ற தாயாரை மோதிய லொறி; நேர்ந்த சோகம்
கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குடாபட்டிய சந்தியில் தாயுடன் சிறுமி ஒருவரும் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை (05) வெசாக் தினத்தை முன்னிட்டு பாடசாலையொன்றில் இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றின் பின்னர் தாய் தனது இரண்டு மகள்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
லொறியுடன் மோதி விபத்து
சிறுமியின் தாய் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் காயமடைந்த தாய் மற்றும் இரு மகள்மாரும் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒரு மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் விபத்தின் போது இரு மகள்மாரும் தலைக்கவசம் அணியாமல் இருந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.