ஒரு லிட்டர் பெட்ரோல் 1 ரூபாய் 48 காசுகள்: எந்த நாட்டில் தெரியுமா? ஆச்சரிய தகவல்
வெனிசுலாவில் ஒரு லிட்டர் பெற்றோல் 1.48 ரூபாய்க்கு விற்கப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுவே உலகிலேயே இங்குதான் குறைந்த் விலையில் பெற்றோல் விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெற்றோல் , டீசல் விலையை பொறுத்தவரையில்,
இந்த ஆண்டு (2021) தொடக்கத்தில் இருந்து வேகமாக அதிகரித்துகொண்டுவருகின்றன. இதேவேளை கடந்த ஓகஸ்ட் மாதம் பெற்றோல், டீசல் விலை சற்று குறைந்து இருந்த நிலையில், அதன் பிறகு மீண்டும் அதிகரித்து கொண்டுவருகின்றன. அந்தவகையில் பெற்றோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதேவேளை வெனிசுலாவில் உலகிலேயே குறைந்த விலையாக ஒரு லிட்டர் பெற்றோல் ரூ 1.48 க்கு (இந்திய மதிப்பில்) விற்கப்படுகிறது என்றால் அது ஆச்சர்யமாகவே உள்ளது. உலகிலேயே அதிகபட்சமாக ஹாங்காங்கில் 1 லிட்டர் பெற்றோல் விலை சுமார் ரூ.200 க்கு விற்கப்படுகிறது. நெதர்லாந்தில் ரூ .172 ஆகவும் , நார்வேவில் ரூ .170 ஆகவும்,டென்மார்க்கில் ரூ .162 ஆகவும் விற்பனையாகிறது.
ஆசிய அளவில் பார்க்கும் பொழுது, இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஜப்பானில் ரூ. 93 ஆகவும், சீனாவில் ரூ. 84 ஆகவும், வங்கதேசத்தில் ரூ .77 ஆகவும், இந்தோனேஷியாவில் ரூ . 60 ஆகவும், இலங்கையில் ரூ . 68 ஆகவும், பாகிஸ்தானில் ரூ.59 ஆகவும் , மலேசியாவில் ரூ. 37 ஆகவும் உள்ளது.
அதே வேளையில் மற்ற உலக நாடுகளை ஓப்பிடுகையில் மிக குறைந்த விலையில் வெனிசுலாவில் 1 லிட்டர் பெற்றோல் விலை 1.48 ஈரூபாய்க்கு விற்கப்படுகின்றன. மேலும் ஈரானில் 5 ரூபாய்க்கும் சிரியாவில் 17 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மேலும் 21 நாடுகளில் ஒரு லிட்டர் பெற்றோல் விலை ரூ.50 க்கும் கீழே விற்கப்பட்டு வருகின்றன