மலக்குடலில் ஒரு கிலோ தங்கம்; சினிமாபாணியில் கடத்தல்; சிக்கிய இலங்கையர்!
மலக்குடலில் சுமார் 6.5 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் பெங்களூரு சுங்கத்துறை அதிகாரிகளால் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கைதான இலங்கையரிடம் நபரிடம் இருந்து 1.2 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
விமான நிலையத்தில் விசாரணை
33 வயதுடைய சந்தேக நபர் 8ஆம் திகதி இரவு பஹ்ரைனில் இருந்து வந்து இறங்கிய நிலையில் விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அவர் தனது மலக்குடலில் ஒரு கிலோ தங்கப் பசையை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து 4 காப்ஸ்யூல்களில் அடைக்கப்பட்ட தங்கத்தை அந்த நபர் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
அவர் தமிழகத்தில் பிளம்பர் வேலை செய்து வருவதையும், இந்தியாவுக்கு தங்கம் கடத்துவதற்காக அடிக்கடி வளைகுடா நாடுகளுக்குச் சென்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.