புலியை பிளந்த ரணிலுக்கு எம்மை பிளப்பது சுலபம்; காலிமுக போராட்ட நபர்
புலிகளை பிளந்த ரணிலுக்கு எம்மை பிளப்பது சுலபம் என காலிமுக போராட்டகாரர் குரலொன்று கூறுகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவரது முகநூலில்,
அதாவது நாடாளுமன்றத்தை ஆக்கிரமித்து அரசியலமைப்பு மூலமாக எமக்கு தீர்வு தரும் கடைசி அமைப்பை அளிக்க வேண்டாம்.
போராட்ட காரர்கள் ஆக்கிரமிக்க வேண்டிய ஜனாதிபதி, பிரதமர் செயலகங்களை ஏற்கனவே ஆக்கிரமித்தோம் அவ் வேலையில் ஒரு உயிருக்கும் சேதம் ஏற்படவில்லை.
அதாவது அவ் வேளையில் ராணுவத்தினர் தோட்டக்கலை பயன்படுத்தவில்லை எவரையும் சுட வில்லை என்பதை சுட்டி காட்டுகின்றார்.
பெதும் கேர்னர் (pathum kerner) என்ற நபர் காலி முக போராட்டத்தில் நுழைந்து இத்தகைய 'பாராளுமன்றத்தை பிடி' என்ற தவறான வழி காட்டலை தருவதாக கூறுகிறார். இதன் மூலம் புலியை பிளந்த ரணிலுக்கு எம்மை பிளப்பது சுலபம் என்கிறார்.
அத்தோடு நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இல்லத்தில் கை வைத்தால் உலகமும் எம்மை நிராகரிக்கும் என்று கூறுகிறார். மேலும் ஏற்கனவே எமக்கு ஆதரவாக இருந்த சட்டத்தரணிகள் சங்கமும் எம்மை விமர்சித்து வருகின்றதாகவும் அவரின் முகநூலில் பதிவிட்டுள்ளார்.