மனைவியை பணயம் வைத்துச் சூதாடி தோற்ற கணவன் ; பலரால் பலமுறை சீரழிக்கப்பட்ட இளம் குடும்பப்பெண்
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் டேனிஷ். இவருக்கும் பாக்தாத் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
டேனிஷ் குடிப்பழக்கத்திற்கும் சூதாட்டத்துக்கும் அடிமையாகி இருந்தார். எப்போதும் சூதாட்டம் ஆடிக் கொண்டுதான் இருப்பார். சூதாட்டத்தில் ஈடுபட்டு பணம் பொருட்களை நிறைய இழந்துள்ளார்.

பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல்
இதற்கிடையே, தன் மனைவியிடம் அவரது வீட்டிற்குச் சென்று நகை, பணம் வாங்கி வரச்சொல்லிக் கட்டாயப்படுத்தினார். அவர் வாங்கி வரவில்லை. தான் கேட்டும் நகை பணம் வாங்கி வராததால் மனைவி மீது டேனிஷ் ஆத்திரத்திலிருந்தார்.
இந்த நிலையில், தான் வழக்கமாகச் சூதாடும் இடத்திற்குச் சென்ற அவரிடம் அன்று பணம் இல்லை. ஆனால் சூதாடாமல் அவரால் இருக்க முடியவில்லை. அப்போது என்ன செய்யலாம் என்று யோசித்த அவர் பணத்திற்குப் பதிலாக தனது மனைவியைப் பணயமாக வைத்துச் சூதாடினார்.
அப்போது துரதிஷ்டவசமாக அன்று அவர் சூதாட்டத்தில் தோற்றுப்போனார்.பணயமாக வைத்த மனைவியைக் கொண்டு சென்று வெற்றி பெற்றவர்களிடம் ஒப்படைத்தார்.
சூதாட்டத்தில் வெற்றி பெற்ற 8 பேர் கொண்ட கும்பல் அவரது மனைவியை மாறி மாறி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தத் தொடங்கினர். இதனைக் கணவரிடம் கூறியும் அவர் செவி சாய்க்கவில்லை. இதில் அந்த பெண் பலவீனம் அடைந்தாள்.
அந்த 8 பேர் கும்பலுடன் சேர்ந்து டேனிசும் அவரது மனைவியைத் துன்புறுத்தி அவரை ஆற்றில் தூக்கி வீசினார். நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டனர்.
இதையடுத்து அவர் தனக்கு நடந்த கொடுமை குறித்துக் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.