யாழில் இளம் பெண்களுக்கான மாபெரும் கடின துடுப்பாட்ட திருவிழா
யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் (JSAC) unicef நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் Sports For Development & Peace செயற்றிட்டத்தினூடாக நேற்றைய தினம் (02) வடக்கின் இளம் பெண்களுக்கான மாபெரும் கடின துடுப்பாட்ட திருவிழா (Northern Cricket Carnival) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் வெகுசிறப்பாக இடம்பெற்றது.
இந்த துடுப்பாட்ட போட்டியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்கள் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 70 இளம் பெண்கள் பங்குபற்றியிருந்தனர்.
இந்நிகழ்வில் unicef நிறுவன சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் சர்மிலி சதீஸ், பிரதேச செயலர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டு கழகங்கள், துடுப்பாட்ட ரசிகர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
வடக்கில் முதன்முதலாக இடம்பெற்ற பெண்களுக்கான கடின பந்து போட்டி என்பதுடன், பெண்கள் மத்தியில் துடுப்பாட்ட ஆர்வத்தினை அதிகரிக்கின்ற வகையில் இத்துடுப்பாட்ட திருவிழா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.