இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து
ஹட்டன் – சாஞ்சிமலை பிரதான வீதியின் டிக்கோயா தரவளை பகுதியில் இன்று (05) காலை இடம்பெற்ற டிப்பர் வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டனில் இருந்து சாஞ்சிமலை நோக்கிப் பயணித்த பெரிய ரக டிப்பர் வாகனமும், சாஞ்சிமலையில் இருந்து டிக்கோயா நோக்கி பால் ஏற்றிச் சென்ற சிறிய ரக டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பால் ஏற்றிச் சென்ற சிறிய ரக டிப்பர் வாகனத்தின் சாரதி காயமடைந்த நிலையில், டிக்கோயா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து காரணமாக குறித்த பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பால் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்துக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

அதிக வேகம் காரணமாகவே விபத்து இடம்பெற்றிருக்கலாம் என தெரிவித்துள்ள ஹட்டன் பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.