வார இறுதியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கவிலை!
ஜூன் மாத தொடக்கத்தில் தங்கம் விலை சரிவை கண்டதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். எனினும் அதன்பின்னர் தங்கம் விலை ஏற்றம் கண்டதால் நகைப்பிரியர்கள் கவலைகொண்டனர்.
இன்றைய தங்க விலை
இந்நிலையில் சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் 5,590 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ரூ.44,720 ஆகவும் விற்பனையாகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ஒரு கிராம் 4,579 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.64 குறைந்து ஒரு சவரன் ரூ. 36,632 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.80 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.79,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.