நாடாளுமன்ற வளாகத்தில் பதற்ற நிலை! பொலிஸார் குவிப்பு
நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதியில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் கடுமையான பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அங்கு அமைக்கப்பட்டுள்ள வீதித் தடைகளை தகர்த்து மாணவர்கள் உள்நுழைய முற்பட்ட நிலையில் இவ்வாறு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திற்கு பேரணியாக சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்றத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடையை தகர்க்க முற்பட்ட போது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
“அரசாங்கத்தை விரட்டுவோம் – முறைமையை மாற்றுவோம்” எனும் தொனிப்பொருளில் மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.


