பிரித்தானியா நகரமொன்றின் மேயராக புலம்பெயர் இலங்கை தமிழர்
பிரித்தானியாவில் உள்ள நகர் ஒன்றின் முதல்வராக ஏதிலியாக சென்று பும்பெயர்ந்த ஈழத்தமிழர் ஒருவர் பதவி ஏற்றுள்ளார்.
தொழில் கட்சியின் உறுப்பினரான இளங்கோ இளவழகன் (Elango Elavalakan) என்பவரே இப்ஸ்விச் (Ipswich) மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இவருக்கான வேட்புமனுவை சபையின் தலைவர் நீல் மெக்டொனால்ட் (Neil MacDonald) முன்மொழிந்துள்ளார்.
இளங்கோ இளவழகனுக்கான வேட்பு மனுவை முன்மொழிந்த போது "போர் மற்றும் துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடிய ஒரு ஏதிலியின் இந்த அறிவிப்பு, ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கி இங்குள்ள சமூகத்திற்கு அவர் பங்களித்த ஒரு செய்தியை எடுத்துச்செல்லும் என அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்து ஒருவர் முதல்வராக வருவது நகரத்தின் பெரும் பன்முகத்தன்மையையும் பன்முக கலாசாரத்தையும் காட்டுகிறது என்று நகர இந்து சமாசத்தின் தலைவரான சச்சின் கராலே கூறியுள்ளார்.
முன்னதாக இலங்கையை விட்டு வெளியேறிய இளவழகன் இந்தியா, உகண்டா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளில் பணிபுரிந்த பின்னர் இங்கிலாந்துக்கு சென்றுள்ளார்.
ஆரம்பத்தில் கிழக்கு லண்டனில் உள்ள இல்ஃபோர்டுக்கு (Ilford)) குடிபெயர்ந்ததோடு 2006இல் இப்ஸ்விச்சிற்குச் சென்றுள்ளார்.
பதவியேற்ற பின்ன அவர் கூறுகையில், நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த பெரிய நகரத்தின் முதல்வராக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று இளவழகன் கூறியுள்ளார்.
You May Like This Video