மருமகனின் உயிரைப் பறித்த மாமனார்; இலங்கையில் சம்பவம்
தந்தையொருவர் தனது மகளின் கணவனின் உயிரிப்பறித்த சம்பவம் ஹபரணை சேனாதிரியாகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
வாய்த்தர்க்கம்
நேற்றிரவு அவர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 38 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என்பதுடன் அவர் அம்பாறை பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ சிப்பாய் தனது மனைவி வீட்டார் விடுமுறையில் இருந்த சேனாதிரியாகம பிரதேசத்திற்கு வந்த போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக மனைவியின் தந்தை கூரிய ஆயுதத்தால் மருமகனை தாக்கியுள்ளார்.
தந்தை மீது மகள் தாக்குதல்
அப்போது, தனது கணவரை காப்பாற்றுவதற்காக மகள் மண்வெட்டியால் தந்தையை தாக்கியதாகவும், தந்தையும் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் மகளும் படுகாயமடைந்துள்ளதுடன், அவர் தற்போது தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் தந்தை ஹபரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இராணுவ பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.