உடைந்தது அ.தி.மு.க. - பா.ஜ.க. உறவு ; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக அதிமுக விலகுவதாக அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள்இ எம்.பி.க்கள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிரைவேற்றப்பட்டது.

அண்ணாமலையால் ஏற்பட்ட பிளவு
ஆளும் பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டின் அ.தி.மு.க.வும் அங்கம் வகித்தது. கடந்த சில மாதங்களாக அ.தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் உரசல் நிலவி வந்தது.
பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை கூறி வந்த சில கருத்துக்கள் அ.தி.மு.க.வினரை ஆத்திரமடைய செய்தது. இதனையடுத்து அண்ணாமலையை தமிழக பா.ஜ.க. தலைமை பொறுப்பில் இருந்து நீக்க அ.தி.மு.க.வினர் கோரி வந்தனர்.

இந்நிலையில் பா.ஜ.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் இடையே நிலவி வந்த உறவு முறிந்தது என அக்கட்சி சார்பில் அதிகாரபூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி முறிந்ததாக இக்கட்சியின் முக்கிய தலைவரான கே.பி. முனுசாமி நிருபர்களிடம் இன்று மாலை தெரிவித்தார்.