பிக் பாஸ் 5-ல் இளையதளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர்!
பிரபல தொலைக்காட்சியில் 50 நாட்களை கடந்து வெற்றி நடைபோடும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. முன்பை காட்டிலும் இப்போது தான் பல்வேறு சுவாரஸ்யமான திருப்பங்களை கொண்டுள்ளது பிக்பாஸ் வீடு .
18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், தற்போது 6 பேர் வெளியேறி விட்ட நிலையில் மீதமுள்ள போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடர்கிறது. இதில் அவ்வப்போது வைல்டு கார்டு எண்ட்ரியாக ஒரு சிலர் உள்ளே வந்த வண்ணம் இருக்கின்றனர்.
வைல்டு கார்டில் வருபவர்கள் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு எல்லா சீசனிலும் இருந்ததுண்டு. அதே போன்று இந்த ஐந்தாவது சீசனில் ரீ-எண்ட்ரியாக பிக் பாஸ் போட்டியாளர் அபிஷேக் ராஜா, அவரை தொடர்ந்து கோரியோகிராபர் அமீர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

தற்போது மூன்றாவது வைல்டு கார்டு எண்ட்ரியாக நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் உள்ளே நுழைந்துள்ளார்.
சஞ்சீவ் சின்னத்திரையில் தனக்கான முக்கிய அங்கீகாரத்தை உருவாக்கி வைத்துள்ளவர் சஞ்சீவ். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவர் பணிபுரிந்துள்ளார்.
அதோடு சஞ்சீவ் நடித்த முக்கிய சின்னத்திரை நாடகங்களில் நடித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள இவர் 2007 - 2013 ஆம் ஆண்டு வரை 'மானாட மயிலாட' நடன நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தார். மேலும் இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இப்படி பல சிறப்புகளை கொண்டதுடன், விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பதாலும் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக ரசிகர்கள் பட்டாளம் நிச்சயம் உருவாக போகிறது என கூறப்படுகின்றது.
இதேவேளை பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்துள்ளதையடுத்து சின்னத்திரை பிரபலங்களும் சஞ்சீவிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.