வாட்டிவதைக்கும் வெய்யில்; சூடு பிடிக்கும் வெள்ளரிப்பழ விற்பனை!
நாட்டில் அதிக வெப்பமான காலநிலை நிலவிவரும் நிலை வெள்ளரிப்பழ விற்பனை சூடு பிடித்துள்ளது.
வெள்ளரிப்பழத்துக்கு சிறந்த கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன், இப்பழங்கள் சுமார் 300 - 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
300 - 1000 ரூபாய் வரை விற்பனை
அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதி பிரதான வீதியோரங்களில் வெள்ளரிப்பழம் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன.
குறிப்பாக, பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, காரைதீவு, சம்மாந்துறை, அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களில் வெள்ளரிப்பழம் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதை காண முடிகிறது.
கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியோரங்களில் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழங்களை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள உடல் உஷ்ணத்தை தணிக்கும் பொருட்டு வெள்ளரிப்பழங்கள் சாப்பிடுவதில் மக்கள் அதிக நாட்டம் கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக செய்கையிடப்பட்டு, அறுவடை செய்யப்பட்டு, ஏனைய ஊர்களுக்கு வெள்ளரிப்பழங்கள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.
அதேவேளை , கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதியில் இளநீர், தோடை, குளிர்பானம் செய்யும் விற்பனை நிலையங்கள் அதிகமாக காணப்படுகின்றன.