தேசபந்துவின் வழக்கு விசாரணைக்காக புதிய குழு
தேசபந்து தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான விசாரணைக்கு 4 பேர் கொண்ட பொலிஸ் விசாரணைக் குழு நியமனம்.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க 4 பேர் கொண்ட பொலிஸ் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட நான்கு அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்று பதில் பொலிஸ்மா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணைக் குழுவொன்றை நியமிக்க பரிந்துரைக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரிருக்கு விசாரணைக் குழு நேற்று (26) கடிதம் ஊடாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.