'லிப்ட்’ கொடுப்பதாக கூறி 9ஆம் வகுப்பு மாணவி மீது பாலியல் வன்கொடுமை
இந்தியா ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் தரிங்பாடி நகரில், 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் விழாவை முன்னிட்டு, மாணவி தனது அக்கா வீட்டிற்கு சென்று பின்னர், விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தை காணும் பொருட்டு, மார்க்கெட்டுக்கு சென்றார்.
வீடு திரும்பும் போது, ஒரு தனியார் காரில் வந்த ஒருவர், “லிப்ட்” தருவதாக கூறி, மாணவியை காரில் ஏற்றிக் கொண்டுச் சென்றார்.
பின்னர், மாணவியை காருக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தரிங்பாடி பொலிஸாரிடம் முறைபாடு அளித்துள்ளனர்.
பொலிஸார் மாணவியிடம் வாக்குமூலம் பதிவு செய்ததுடன், மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.
முறைபாட்டின் பெயர் குறிப்பிடப்பட்ட நபர் திருமணமானவர் எனத் தெரியவந்துள்ளது.
தற்போது அவர் தலைமறைவாக உள்ள நிலையில், விரைவில் கைது செய்வோம் என மாவட்ட பொலிஸார் தெரிவித்தார்.