யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற மனித பாவனைக்குதவாத 960 கிலோ வெங்காயம்
யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பிற்கு மனித பாவனைக்குதவாத பெரிய வெங்காயத்தை கனரக லொறிமூலம் எடுத்து வந்த நபரை வியாழக்கிழமை (26) மாலை பொதுச் சுகாதார அதிகாரிகள் கைது செய்ததாக கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரீ.மிதுன்ராஜ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி. சுகுணனின் ஆலோசனையின் பேரில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலில் குறித்த கனரக லொறி மடக்கிப் பிடிக்கப்பட்டது.
அத்துடன் லொறியிலிருந்து மனித பாவனைக்குதவாத 40 மூடைகளைக் கொண்ட 960 கிலோ பெரிய வெங்காயம் மீட்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் ஆறு மாத கால ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் நீதவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போலினால் விதிக்கப்பட்டது.