90 பாலியல் பலாத்காரம் செய்த கொடூர குற்றவாளிக்கு 42 ஆயுள் தண்டனை
தென்னாப்பிரிக்காவில் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர குற்றவாளிக்கு 42 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோசிநதி பகாதி என்ற நபர் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு கிழக்கே உள்ள எகுர்ஹுலேனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
2012 முதல் 2021க்கு இடைப்பட்ட 9 ஆண்டுகளில் 9 வயது சிறுமி முதல் 44 வயது பெண் வரை என 90 பாலியல் பலாத்கார சம்பவங்களில் ஈடுபட்டுள்ளான்.
பகாதியால் (Nkosinathi Phakathi) பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக்குழந்தைகள் என்று தென்னாப்பிரிக்காவின் தேசிய வழக்கு ஆணையம் (NPA) தெரிவித்துள்ளது.
பெண்கள் வேலைக்கும் போகும் போதும் பள்ளி மாணவிகள் பள்ளிக்குச் செல்லும்போதும் அவர்களை பின்தொடர்ந்து, கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
சில பெண்களை அவர்களின் சொந்த வீடுகளுக்கே சென்று எலக்ட்ரீஷியன் (Electrician) போல் நடித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
கடந்த 2021-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டபோது, காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் பகாதி தனது காலை இழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.