மஹிந்த வீட்டு வளர்ப்பு நாயின் கழுத்தில் 90 பவுணில் தங்க மாலை!
மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனின் வளர்ப்பு நாயின் கழுத்தில் உள்ள தங்க மாலை சுமார் 90 பவுன் எடையினை உடையது என ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசார மேடையில் இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்
“மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனின் வளர்ப்பு நாயின் கழுத்தில் உள்ள தங்க மாலை சுமார் 90 பவுன் எடையினை உடையது. இவைகள் யாருடைய பணம்? இவை அனைத்தும் திருடிய பணம் தானே.
திருமணம் முடித்ததும் வீடு ஒன்றினை வாங்கினார் 36 கோடிக்கு அதற்கு அப்பால் உள்ள இரு இடங்களை வாங்கினார் 9 கோடிகளுக்கு மொத்தம் 45 கோடிகளுக்கு சொத்தது.
உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா டிவி அலைவரிசைகளில் ஏட்டிக்கு போட்டியாக ரொக்கட் சயன்ஸ் விஞ்ஞானம் குறித்து ரோஹிதவை நேர்கண்டவர். ரொக்கட் சயன்டிஸ்ட் என்று பீய்த்துக் கொள்ள என்ன இருக்கின்றது?
அதுவும் சாதாரண தர பரீட்சையில் கணிதத்தில் பெயில். கணிதத்தில் பெயில் என்டால் கலைப் பிரிவில் கூட உயர்தரம் தொடர முடியாது. அவ்வாறு இருக்க எங்கிருந்து இந்த ரொக்கட் சயன்ஸ் அறிவு? அவர்களில் குற்றம் இல்லை.
வாக்கினை நாம் தான் அவர்களுக்கு இடுகிறோம். அவ்வாறு இருக்க யாரும் வாக்கு எனக்கு வேண்டாம் என்று கூறுவதில்லையே. நாட்டு மக்கள் சிந்தியுங்கள். ஊழல்வாதிகளை தலை தூக்க விடாதீர்கள்.” எனத் தெரிவித்திருந்தார்.
You My Like This Video

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.