உக்ரைன் விரர்களுக்காக 9 வயதுச் சிறுமியின் நெகிழ்ச்சி செயல்! கண்ணீவிட்ட தந்தை
உக்ரைனைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி தனது தலைமுடியை வெட்டி விற்று உக்ரைனின் ஆயுதப் படைகளுக்கு பணம் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் வடக்கு நகரமான செர்னிஹிவைச் சேர்ந்த கிரா ஹுபினா என்ற 9 வயதுச் சிறுமியே இந்த செயலை செய்துள்ளார்.
சிறுமி கிரா ஹுபினா மற்றும், அவரது குடும்பத்தினரையும் ரஷ்ய குண்டுவீச்சிலிருந்து உக்ரைன் படைகள் பாதுகாப்பாக மீட்டுக்கொடுத்ததால், தம்மை காப்பாற்றிய நாட்டின் போராளிகளுக்காக பணம் திரட்ட சிறுமி முடிவு செய்தார்.
சிறுமியின் தந்தை இவான், உக்ரைனிய செய்தி நிறுவனமான UNIAN இடம், தனது மகளின் சைகையால் நெகிழ்ந்து போனதாகவும், அவளது நோக்கத்தை அறிந்த பிறகு அவள் முடியை வெட்ட ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.
அதோடு தனது மகளின் இந்த செயல் உண்மையாக, நான் அழுதேன் என்றும், ஏனெனில் அது தனது மனதை தொட்டதாகவும் அவர் கூறினார்.