நாட்டின் 80 சதவீதமான மருந்துத் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு!
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக சுகாதாரத்துறை கடுமையான சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது. அதற்கேற்ப தொடர்ந்து 216 மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதாரத்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் மருந்துத் தட்டுப்பாடு பிரச்சினையானது 80 சதவீதமான அளவில் நிவர்த்திசெய்யப்பட்டுள்ளன.
எனினும் மீதமுள்ள மருந்துத் தட்டுப்பாடு பிரச்சினையும் இனிவரும் காலங்களில் நிவர்த்தி செய்ய வேண்டும்.
என சுகாதாரத்துறையின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
14 உயிரைகக் காக்கும் மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இல்லையென அவர் மீண்டும் உறுதியாக தெரிவித்தார்.
தற்போது பயன்பாட்டில் உள்ள சுமார் 1,300 வகையான மருந்துகளில், 383 வகையான மருந்துகள் அத்தியாவசியமானதாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், தற்போதைய பற்றாக்குறையானது 216 வகையான மருந்துகளை பாதிக்கிறது, மேலும் அவற்றை விரைவில் வாங்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.