24 வயது இளைஞனால் 74 வயது மூதாட்டி பாலியல் துஷ்பிரயோகம்; நீதிகோரி மக்கள் போராட்டம்
ஹட்டன் - டிக்கோயா போடைஸ் தோட்டப் பகுதியில் 74 வயது மூதாட்டியை 24 வயது இளைஞர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தொடர்பில் பிரதேச மக்கள் இன்று (23) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தை நிலைநாட்டு”, “கைது செய் போதை குற்றவாளியை கைது செய்”, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோஷம் எழுப்பினர். இது தொடர்பாக ஹட்டன் பொலிஸாரி கூறுகையில்,
மூதாட்டி வைத்தியசாலையில்
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்தில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட 24 வயது நபரை எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று (22) சந்தேக நபரை ஹட்டன் பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20ஆம் திகதி குறித்த தோட்டப் பகுதியில் உள்ள இளைஞன் ஐஸ் போதைப்பொருள் உட்கொண்டுவிட்டு, மூதாட்டியின் வீட்டு ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ளான்.
இளைஞன், மூதாட்டியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட 74 வயது மூதாட்டி டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஹட்டன் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.