அழகு நிலையம் ஒன்றில் திடீரென மயங்கி விழுந்த ஏழு பெண்கள்
கண்டி, பேராதனை வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் நேற்று (20) மாலை மயங்கி விழுந்த ஏழு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின் தடை ஏற்பட்டதை தொடர்ந்து அழகுக்கலை நிலையத்தின் மூடிய பகுதியில் மின் குளிரூட்டி செயற்பட்டு கொண்டிருந்த போது ஜெனரேட்டரை இயக்கியுள்ளனர்.
ஜெனரேட்டரிலிருந்து வந்த நச்சுப் புகை
இதனையடுத்து, காற்றோட்டம் குறைவாக இருந்த நிலையில், ஜெனரேட்டரிலிருந்து வந்த நச்சுப் புகையை சுவாசித்தமையினால் பெண்கள் மயங்கி விழுந்ததிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்கள் கண்டி தேசிய வைத்தியசாலை மற்றும் அருகிலுள்ள தனியார் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களில் அழகுக்கலை நிலையத்தைச் சேர்ந்த 4 ஊழியர்கள் மற்றும் சம்பவம் நடந்த நேரத்தில் அங்கிருந்த மூன்று வாடிக்கையாளர்களும் அடங்குவர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் உடல்நிலையில் நல்ல நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.