அலி காமெனி உடல் நல்லடக்கம் செய்யப்படவில்லை ; மொஜ்தபா காமெனி எங்கே!

Missile United States of America Funeral Iran-Israel War Ayatollah Ali Khamenei
By Sulokshi Apr 20, 2026 10:48 AM GMT
Report

   அமெரிக்க - இஸ்ரேல் இணைந்து ஈரானில் நடத்திய கூட்டுத்தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் அயதுல்லாஹ் அலி காமெனி உயிரிழந்து ஏழு வாரங்கள் கடந்தும் இன்னும் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இது ஈரானின் மத, கலாசார, அரசியல் மரபுகளுக்கு மாறான ஒரு செயல் என சர்வதேச மட்டத்தில் கருதப்படுகிறது. 86 வயதான அலி காமெனியின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான இடத்தை ஈரான் அரசு இன்னும் இறுதி செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அலி காமெனி உடல் நல்லடக்கம் செய்யப்படவில்லை ; மொஜ்தபா காமெனி எங்கே! | 7 Week On Ali Khamenei Body Has Not Been Buried

நல்லடக்கம் செய்வதற்கான இடம் இறுதி செய்யவில்லை

மறைந்த முன்னாள் உயர் தலைவரின் மகனும் தற்போதைய உயர் தலைவருமான மொஜ்தபா காமெனி தலைமையிலான நிர்வாகமானது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளால் ஈரானுக்கு ஏற்படுத்தப்படும் பெரும் போர் அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமையே, அலி காமெனியின் உடல் நல்லடக்கம் செய்யப்படாமல், இறுதி மரியாதை நிகழ்வுகள் தாமதமாவதற்கான சூழ்நிலைக் காரணங்களாக அமைவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

கனடாவில் நீதி பொய்த்ததா? இலங்கை தமிழர்கள் மூவர் உயிரிழப்புக்கு காரணமானவர் விடுவிப்பு

கனடாவில் நீதி பொய்த்ததா? இலங்கை தமிழர்கள் மூவர் உயிரிழப்புக்கு காரணமானவர் விடுவிப்பு

மேலும், ஈரான் பாதுகாப்பு நிபுணர் ஒருவர், நல்லடக்கத்துக்கான தாமதத்துக்கு காரணம் போர் குறித்த கவலையல்ல, மாறாக, அச்சமே என்று குறிப்பிட்டுள்ளார். ஈரானில் இயங்கும் ஜனநாயகப் பாதுகாப்புக்கான அறக்கட்டளையைச் சேர்ந்த Behnam Taleblu, நியூயோர்க் போஸ்ட் பத்திரிகையிடம்,

அலி காமெனி உடல் நல்லடக்கம் செய்யப்படவில்லை ; மொஜ்தபா காமெனி எங்கே! | 7 Week On Ali Khamenei Body Has Not Been Buried

அமெரிக்கா ஈரான் இடையே ஒரு நிலையற்ற போர்நிறுத்தம் நிலவியிருந்தபோதிலும், மொஜ்தபா காமெனி வழிகாட்டலில் உள்ள ஈரான் அரசு தொடர் போர் அச்சத்தால் முடங்கிப்போயுள்ளது என்றும் ஒரு நினைவஞ்சலி இறுதி மரியாதை நிகழ்வை நடத்தும் நிலையில் அரசு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அரசு மிகவும் அச்சத்தில் இருக்கிறது. எந்த சவாலையும் எதிர்கொள்ள முடியாத அளவுக்கு பலவீனமாக உள்ளது” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

முடிவுக்கு வரவுள்ள போர் நிறுத்தம்; இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை; அமெரிக்காவுக்கு ஈரானின் பதில்

முடிவுக்கு வரவுள்ள போர் நிறுத்தம்; இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை; அமெரிக்காவுக்கு ஈரானின் பதில்

அயதுல்லாஹ் அலி காமெனியின் நல்லடக்க நிகழ்வினை ஈரான் தாமதப்படுத்துவதற்கான காரணங்களை நிபுணர்கள் சிலர் கருத்துரைத்துள்ளனர். அயதுல்லாஹ் அலி காமெனிக்கான இறுதிச் சடங்குகளை பிரம்மாண்டமான முறையில் நடத்தினால், அந்த இடத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தக்கூடும் என்று ஈரான் அரசு அஞ்சுகிறது.

இலங்கை வந்த கனடா குடும்பத்திற்கு விடுதியில் காத்திருந்த அதிர்ச்சி!

இலங்கை வந்த கனடா குடும்பத்திற்கு விடுதியில் காத்திருந்த அதிர்ச்சி!

மொஜ்தபா காமெனி  எங்கே...

இறுதி மரியாதை ஊர்வலத்தைப் பயன்படுத்தி, ஈரானில் உள்ள தேசியவாதிகள் மற்றும் போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக கிளர்ச்சிகளில் ஈடுபடலாம் என்ற அச்சமும் அங்கு காணப்படுகின்றமை சுட்டிக்காட்டப்படுகிறது.

அதுமட்டுமன்றி, புதிய உயர் தலைவரான மொஜ்தபா காமெனி, தனது தந்தை இறந்த பின்னர், பல வாரங்களாக பொதுவெளிக்கு வரவில்லை என்றும் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் திருப்பு முனை; நீதிமன்றின் உத்தரவு!

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் திருப்பு முனை; நீதிமன்றின் உத்தரவு!

இந்நிலையில், தந்தைக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றால், அந்த நிகழ்வுக்கு மகன் வருகைதராவிட்டால், அவருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த கேள்விகள் பொதுவெளியில் கிளம்பும் என்றும் அது, அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் கருதப்படுகிறது.

அயதுல்லாஹ் அலி காமெனியின் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கான இடத்தை உறுதி செய்வதற்காக, ஈரானின் வடகிழக்கு நகரமான மஷ்ஹத்தை அந்நாட்டு அரசு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை நல்லடக்கம் தொடர்பில் தற்போது ஆராய்ந்து வரும் மஷ்ஹத் நகரமானது காமெனியின் சொந்த ஊர் என்பதோடு, அது, இஸ்ரேலிலிருந்து வெகு தொலைவில், துர்க்மெனிஸ்தானுடனான ஈரானின் எல்லையில் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகிறது. 

அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US