விரைவில் இலங்கையில் மேலும் 7 பொருட்களுக்கு தடை!
இலங்கையில் மேலும் 7 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதற்கு சட்டமா அதிபரின் பரிந்துரை கிடைத்தவுடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் கூடிய அமைச்சரவை, ஒரு தடவை மட்டும் பயன்படுத்தி அப்புறப்படுத்தும் மேலும் ஏழு பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை, விநியோகத்திற்கு தடை விதிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந் நிலையில் இது தொடர்பில் நேற்று சுற்றுச்சூழல் அமைச்சில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இதேவேளை பிளாஸ்டிக் ஸ்ரோ, முள்ளுக்கரண்டி, கரண்டி, பானக் கோப்பை, கத்தி, இடியப்பத் தட்டு மற்றும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனால் செய்யப்பட்ட பூ மாலைகள் என்பவற்றுக்கே தடை விதிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியாகவுள்ளது.