உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் மீது 7,721 வழக்குகள்!
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடாத்த சதி செய்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் மேல் நீதிமன்ற நீதிபதிகளான தமித் தொட்டவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
[TQBOMM
குறித்த நபர்களுக்கு எதிராக 7,721 குற்றச்சாட்டுகள் நேற்று (09.08.2023) மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.
அவற்றில் ஒரு குற்றச்சாட்டினை மாத்திரம் பிரதிவாதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
மேலதிக குற்றச்சாட்டுகள் எதிர்வரும் (10.08.2023) வாசிக்கப்படும் எனவும் அதுவரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.