வீடொன்றில் படுகொலை செய்யப்பட்ட மூதாட்டி; சம்பவத்தால் அதிர்ச்சி
ஹொரோவ்பொத்தான, மதவச்சிய சந்திப் பகுதியில் தனியாக வசித்து வந்த 68 வயதுடைய பெண் ஒருவர், தனது வீட்டிற்குள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (27) அதிகாலை வேளையில், குறித்த பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார், இது தெரிவித்துள்ளார்.

மெதவச்சிய சந்திப் பகுதியைச் சேர்ந்த இவர், தனது வீட்டிற்கு முன்பாக ஒரு கடையை நடத்தி வந்ததோடு, சம்பவத்தின் போது அங்கு தனியாகவே வசித்து வந்துள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளின் மூலம், அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தக்கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஹொரோவ்பொத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.