ஹொட்டலொன்றில் 66 வயது பெண்ணொருவரும் 28 வயதான இளைஞனும் செய்த மோசமான செயல்!
ஹொட்டலொன்றில் ரகளையில் ஈடுபட்ட 66 வயதான கோடீஸ்வர பெண்ணையும், 28 வயதான காதலனையும் நீர்கொழும்பு நீதிமன்றம் எச்சரிக்கை செய்து, பிணையில் விடுவித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
66 வயதான குறித்த கோடீஸ்வர பெண் தொழிலதிபரும், 28 வயதான காதலனும் கொச்சிக்கடை பகுதியிலுள்ள ஹொட்டல் ஒன்றிற்கு இரவு உணவருந்த சென்றனர்.
இதன்போது உணவு ஓர்டர் செய்து நீண்டநேரமாகியதாக குறிப்பிட்டு, உணவகத்தில் ரகளையில் ஈடுபட்ட நிலையில், ஹொட்டலிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக ஹொட்டல் உரிமையாளரால் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டது.
இதனையடுத்து பெண் தொழிலதிபரும், காதலனும் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, கடும் எச்சரிக்கை செய்யப்பட்டு தலா ரூ. 200,000 பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இதெவேளை 66 வயதான கோடீஸ்வர பெண் திருமணத்திற்கு புறம்பான சட்டவிரோத உறவையே 28 வயதான இளைஞனுடன் பேணி வருவதாக கூறப்படுகின்றது.