திருகோணமலையில் இவ்வளவு எண்ணெய் தொட்டிகள் தேவையில்லை! ஜனாதிபதி அநுர
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 99 எண்ணெய் தாங்கிகள் நாட்டிற்கு எண்ணெய் விநியோகிக்க அதிகமானவை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க Anura Kumara Dissanayaka தெரிவித்துள்ளார்.
கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல பகுதிகளில் எண்ணெய் தொட்டி வளாகங்கள் இருப்பதாகவும், இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் எண்ணெய் சேமிப்பு வசதிகள் இருப்பதாக கூறிய அநுர, திருகோணமலையில் இவ்வளவு எண்ணெய் தொட்டிகள் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையில் 61 எண்ணெய் தாங்கிகளைக் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இந்திய நிறுவனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து நிர்மாணிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இலங்கையை உலகச் சந்தைக்கு எண்ணெய் வழங்கும் நாடாக மாற்ற வேண்டும் என்றும், அங்கு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் கட்டி, எண்ணெயை தொட்டிகளில் சேமித்து வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.