கொரோனா நெருக்கடி ; அடகு கடைக்கு சென்ற 600 கிலோ தங்க நகைகள்!
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக கடந்த சில மாதங்களில் மட்டும் நாடு முழுவதும் உள்ள மக்கள் சுமார் 600 கிலோ நகைகளை அடகு மற்றும் விற்பனை செய்துள்ளதாக தகவவெளியாகியுள்ளமை அதிர்ச்சியிஅனை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக மக்கள் வேலைவாய்ப்புக்கள் இன்றி வீடுகளுக்குள் முடங்கியதனால் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் மக்கள் தம்மிடமிருந்த தங்க நகைகளை இவ்வாறு விற்றுள்ளதாக நகை வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் தொழிலதிபர்கள் மற்றும் வங்கியாளர்கள் தெரிவிக்கின்றனர்
அத்துடன் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக புதிய நகைகளை கொள்வனவு செய்வது சுமார் 80 வீதத்தால் குறைந்துள்ளதாக நகை வியாபாரிக ள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை தற்போது நகைகளை அடகு வைத்து விற்பனை செய்ய ஆட்கள் வருவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் தொழிலதிபர்கள், தங்களது வருமானம் வெகுவாக குறைந்துள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.