மண்ணெண்ணெய் வாங்க சென்ற 60 வயது தாய்க்கு ஏற்பட்ட நிலை! கலங்க வைத்த சம்பவம்
கொழும்பு பேஸ்லைன் வீதியில் 60 வயது மதிக்கத் தக்க தாய் ஒருவர் மூன்று மண்ணெண்ணெய் போத்தல்களுடன் கடுமையான களைப்புடன் வீதியோரத்தில் அமர்ந்துள்ளார்.
அவரிடம் Fazhan Nawas என்ற நபரொருவர் எப்போது மண்ணெண்ணெய் வாங்க வந்தீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு அந்த தாய் நேற்று இரவு 10.00 மணி வரை இங்கு காத்திருந்தேன் அவர்கள் தரவில்லை, மீண்டும் இன்று காலை 10.30 மணிக்கு இதே இடத்திற்கு வந்தேன் 4.30 மணியளவில் மண்ணெண்ணெய்யை தந்தார்கள் என பெரும் கலைப்புடன் கூறினர்.

இலங்கையில் அடுப்பு மூட்டுவதற்காக ஒரு மனிதன் படும் துன்பத்திற்கு இதுவே போதுமான உதாரணமாகும். மேலும் இப்படியான பெரும் நெருக்கடிக்கு மத்தியில் தான் இலங்கை மக்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிக்கிறது.
இதேவேளை, மணிக்கணக்கில் எரிவாயு, பால்மா, பெற்றோல் என்று பல அத்தியவாசி பொருள்களுக்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலையையும் காணக்கூடியதாக இருக்கின்றது.