6,300 அடி உயரமான குன்றில் ஊஞ்சல் ஆடிய போது நேர்ந்த அசம்பாவிதம்! திகில் சம்பவம்
ரஷ்யாவில் 6,300 அடி உயரமான குன்றின் ஓரத்தில், ஊஞ்சலில் இருந்து தவறி விழுந்த இரண்டு பெண்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய திகில் சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய குடியரசின் தாகெஸ்தானில் அமைந்துள்ள ஊஞ்சல் விளையாட்டுத் திடலில், இரண்டு பெண்கள் ஊஞ்சலில் ஆடிக்கொண்டு இருக்கும் போது, ஊஞ்சலின் சங்கிலி ஒன்று அறுந்துள்ளது.
இதனால் கீழ் நோக்கி விழுந்த பெண்கள், குன்றின் விளிம்பிற்கு அப்பால் அமைந்துள்ள ஒரு சிறிய மர மேடையில் பிடித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த இரு பெண்களும் சிறு கீறல் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
இந்த நிலையில் உயரத்தில் ஊஞ்சல் ஆடும் போது அவை நழுவினால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்வது அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கிறது.
1DX13D
இந்த சம்பவத்தின் போது பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.